

கரூர் பண்டரிநாதன் பஜனை மடத்தில் ஆஷாட ஏகாதசி விழாவை முன்னிட்டு கருவறையில் சென்று பக்தர்கள் சுவாமியைத் தொட்டு வணங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாகவும், இதுகுறித்து முன்கூட்டியே பக்தர் களுக்கு தெரியப்படுத்தாததாலும், மிக குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களே நேற்று பஜனை மடத்துக்கு வந்து சுவாமியை தொட்டு வணங்கினர். இதனால் பக்தர்கள் கூட்டமின்றி பஜனை மடம் வெறிச்சோடி காணப்பட்டது.