

திருநெல்வேலி வண்ணார்பேட்டை யில் பாபு பாலி கிளினிக் மற்றும் டயக்னோஸிஸ் தொடக்க விழா நடைபெற்றது.
அருட்தந்தை ஜோமிக்ஸ் ஜெபித்து ஆசி வழங்கினார். ஸ்காட் கல்வி குழும நிர்வாக இயக்குநர் அருண்பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு குத்துவிளக்கேற்றினர். ஸ்காட் கல்வி நிறுவனங்களின் தலைவர் கிளிட்டஸ் பாபு தொடங்கி வைத்தார். மருந்தகத்தை சென்னை தொழிலதிபர் எல்ரெட் குமார் தொடங்கி வைத்தார். ஆய்வகத்தை ஸ்காட் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் அமலி கிளிட்டஸ் பாபு தொடங்கி வைத்தார். புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுகளை ஸ்காட் கல்வி நிறுவனங்களின் செயல் இயக்குநர் து.து.மெனான்டஸ் மற்றும் மு.ராம கிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவில் ஸ்காட் கல்வி குழுமங்களின் பொது மேலாளர் ஜெயக்குமார், துணை பொது மேலாளர் கிருஷ்ணகுமார், ஸ்காட் கல்லூரி முதல்வர்கள், நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.