செங்கத்தில் தர்ணா போராட்டம் எதிரொலி - 14 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை வழங்க ஆணை :

செங்கம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
செங்கம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
Updated on
1 min read

செங்கம் வட்டாட்சியர் அலுவல கத்தில் மாற்றுத்திறனாளிகள் நடத்திய தர்ணா போராட்டத்தின் பலனாக 14 பேருக்கு உதவித் தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், தி.மலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று உதவித் தொகைமற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்காமல் அலைக்கழிக்கப்படு வதை கண்டித்து தர்ணா போராட்டம் நடைபெற்றது.

அப்போது அவர்கள் கூறும் போது, “மாதாந்திர உதவித்தொகை கேட்டு மாற்றுத்திறனாளி கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு உதவித் தொகை வழங் காமல் வருவாய்த் துறையினர் அலைக்கழிக்க செய்கின்றனர். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை. இது தொடர்பாக மனு கொடுத்தும் அதிகாரிகள் அலட்சியம் செய்கின்றனர். விண்ணப்பித்துள்ள தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்” என்றனர்.

இதைத்தொடர்ந்து சமூக பாதுகாப்புத் திட்டம் மூலம் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை வட்டாட்சியர் மனோ கரன் வழங்கினார். மேலும் அவர், தகுதி உள்ள அனைவருக்கும் உதவித் தொகை பெறுவதற்கான ஆணை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட் டத்தை கைவிட்டு புறப்பட்டு சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in