கிரானைட் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் :

கிரானைட் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அருகே கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி கனிம வளத்துறை உதவி இயக்குநர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் மகாராஜகடை அடுத்த நாரலப்பள்ளி கூட்டு ரோடு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு இரு டாரஸ் லாரிகள் ஓட்டுநர் யாரும் இல்லாமல் நின்றது. அவற்றை சோதனையிட்டபோது, லாரிகளில் கிரானைட் கற்கள் இருந்தன. விசாரணையில், ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருந்து கிரானைட் கற்கள் உரிய அனுமதியின்றி எடுத்து வந்தது தெரிந்தது.

இதுதொடர்பாக உதவி இயக்குநர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில், மகாராஜகடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்து லாரியின் உரிமையாளர் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in