பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் - நிலக்கரி தூள்களை இளைஞர் குழுவினர் அப்புறப்படுத்தினர் :

பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் நிலக்கரி தூள்களை தன்னார்வை இளைஞர் குழுவினர் அள்ளி அப்புறப்படுத்தினர்.
பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் நிலக்கரி தூள்களை தன்னார்வை இளைஞர் குழுவினர் அள்ளி அப்புறப்படுத்தினர்.
Updated on
1 min read

பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் நிலக்கரித் தூள்களை தன்னார்வ அமைப்பினர் அப்புறப் படுத்தி தூய்மைப்படுத்தினர்.

பரங்கிப்பேட்டை அருகே கரிக்குப்பத்தில் தனியார் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு ரயில் மூலம் நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. கூட்ஸ் ரயிலில் வரும் நிலக்கரி சரியாக மூடப்படாமல் வருவதால் நிலக்கரி தூள்கள் காற்றில் பறந்து ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குவியலாக விழுந்து விடுகிறது. ரயில் செல்லும் போது இந்த நிலக்கரி தூள்கள் காற்றில் பறந்து சென்று பொதுமக்கள் கண்ணிலும் விழந்து விடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு கண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் குவியலாக கிடந்தநிலக்கரி தூள்களை பரங்கிப் பேட்டை தர்மம் செய்வோர் குழுவை சேர்ந்த இளைஞர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து அள்ளி அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தினர். இதனை தொடர்ந்து கூட்ஸ் ரயிலில் நிலக்கரியை கொண்டு வரும் போது தார்பாயால் முழுவதுமாக மூடி எடுத்து வர வேண்டும் என்றும் இந்த குழுவினர் ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in