

சேலத்தில் 400 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி வந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் அயோத்தியாப்பட்ட ணம் அருகே டிஎஸ்பி மனோ கரன் தலைமையில் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு சிறப்பு தனிப்படை போலீஸார் நேற்று அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த இரு கார்களில் சோதனை நடத்திய போது, ரூ.40 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, காரில் வந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆண்டிசாமி (47), தனபாக்கியம்(69), மதுரை களியமங்கலம் அழகேசன் (29), சேலம் மாவட்டம் கருமந்துறை பகுடுபட்டு வெள்ளேசன் (37) ஆகியோரை கைது செய்தனர். மேலும், காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.