

தேனி அரசு சட்டக் கல்லூரி வீரபாண்டி அருகே செயல்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரிக்கு பேராசிரியர் அருண் முதல்வராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில், மதுரை அரசு சட்டக்கல்லூரி பேராசிரியர் செ.ராஜலட்சுமி பதவி உயர்வு பெற்று, தேனி அரசு சட்டக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பேராசிரியர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.