மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் :

மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்  :
Updated on
1 min read

மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. பொறியாளர் சங்கத் தலைவர் இசக்கிபாண்டி தலைமை வகித்தார். தொமுச மாவட்டச் செயலாளர் நச்சினார்க்கினியன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கருப்பசாமி, எம்ப்ளாயிஸ் பெடரேஷன் மாநில தலைவர் முத்தையா, மின்சார தொழிலாளர் சம்மேளன பொருளாளர் கார்த்திக், மின்சார பொறியாளர் சங்க செயலாளர் ராமன், அம்பேத்கர் எம்ப்ளாயிஸ் சங்க நிர்வாகி அர்ச்சுனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், “2021 மின் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றுவதை கண்டித்து ஜூலை 19-ம் தேதி (இன்று) காலையில் பிரிவு அலுவலகங்களிலும், மாலையில் திருநெல்வேலி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்துவது, மின் துறை அமைச்சருக்கு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அனுப்புவது” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அண்ணா தொழிற்சங்க செயலாளர் கருப்பசாமி நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in