தியாகிகள் சிலைகளுக்கு மரியாதை :

தியாகிகள் சிலைகளுக்கு மரியாதை :
Updated on
1 min read

தியாகிகள் தினத்தையொட்டி, திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சி அலுவலக வளாகத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் ஆர்யா (எ) பாஷ்யம், சங்கரலிங்கனார், செண்பகராமன் ஆகியோரது உருவப்படத்துக்கு, அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் (செய்தித் துறை), என்.கயல்விழி செல்வராஜ் (ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினர் நலத் துறை) ஆகியோர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: ஒவ்வோர் ஆண்டும் ஜுலை 17-ம் தேதியை தியாகிகள் தினமாக கொண்டாடப்பட வேண்டுமென, மறைந்த முதல்வர்கருணாநிதி அறிவுறுத்தியிருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில்தான், சென்னை காந்தி மண்டப வளாகத்தில் 1998-ம் ஆண்டு தியாகிகள் மணிமண்டபம் திறக்கப்பட்டது. சென்னை கிண்டி காந்தி மண்டபவளாகத்தில் 2008-ம் ஆண்டு செண்பக ராமன் சிலை, 1999-ம் ஆண்டு சங்கரலிங்கனார், சுதந்திர போராட்ட வீரர் ஆர்யா பாஷ்யம் ஆகியோரது சிலைகளை திறந்து வைத்தார்.

தாராபுரம் சார் ஆட்சியர் ஆனந்தமோகன், வெள்ளகோவில் நகராட்சி ஆணையர் த.சசிகலா உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in