நாங்குநேரி அருகே - 10 பவுன் நகைக்காக மாமியார் கொலை : மருமகன் உட்பட 4 பேர் கைது

நாங்குநேரி அருகே -  10 பவுன் நகைக்காக மாமியார் கொலை :  மருமகன் உட்பட 4 பேர் கைது
Updated on
1 min read

நாங்குநேரி அருகே மூலக்கரைப்பட்டியை அடுத்த ஜெகநாதபுரம் கிராமத்தில் வடிவம்மாள் (65) என்பவர் தனியாக வசித்து வந்தார். கடந்த 13-ம் தேதி வடிவம்மாள் இறந்து விட்டதாக தெரிய வந்தது. உடல்நலக் குறைவால் வடிவம்மாள் இறந்ததாக அனைவரும் கருதினர். அவரது உடல் அங்குள்ள மாயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

வடிவம்மாள் வைத்திருந்த நகைகளை அவரது மகன் திருமலை நம்பி தேடிப்பார்த்தபோது மாய மானது தெரியவந்தது. அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது, வடிவம்மாள் இறப்பதற்கு முந்தைய நாள் இரவில் பாளையங்கோட்டை நடுவக்குறிச்சியில் வசிக்கும் அவரது இளைய மகள் பரமேஸ்வரியின் கணவர் கல்லத்தியான் மற்றும் சிலர் வந்து சென்றதாக தெரிவித்தனர். இதனால் தனது தாயார் மரணத்தில் திருமலைநம்பிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து மூலக்கரைப் பட்டி போலீஸார் விசா ரணை நடத்தியதில் நகை களுக்காக வடிவம்மாள் தலை யணையால் முகத்தை அமுக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக கல்லத்தியான் (37) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in