கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க - சர்க்கரை, உப உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச வரி : முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கரும்பு விவசாயிகள் மனு

கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க  -  சர்க்கரை, உப உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச வரி :  முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கரும்பு விவசாயிகள் மனு
Updated on
1 min read

கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க சர்க்கரை மற்றும் உப உற்பத்தி பொருட்களுக்கு தமிழக அரசு மிக குறைந்தபட்ச வரி விதிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து சங்கத் தலைவர் கே.வி.ராஜ்குமார் மற்றும் பொதுச் செயலாளர் டி.பாண்டியன் ஆகியோர் அளித் துள்ள மனுவில், “கரும்பு உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு உற்பத்தி ஊக்கத் தொகையாக ரூ.292.50 வழங்க ஆணையிட்டால், விவசாயிகள் ஒரு டன் கரும்புக்கு ரூ.3 ஆயிரம் பெறுவார்கள்.

தமிழகத்தில் உள்ள பெரும் பாலான ஆலைகள், கொள்முதல் விலையில் கோடிக்கணக்கான ரூபாயை நிலுவையாக வைத் துள்ளன. கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க, ஆலைகளுக்கு தமிழக அரசு கடன் வழங்கி, அந்த தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தினால், நம்பிக்கையுடன் விவசாயிகள் மீண்டும் கரும்பு சாகுபடி செய்வார்கள்.

மின்வாரியம் ரூ.150 கோடி பாக்கி

எனவே, நமது தேவைக்கு ஏற்ப, தமிழகத்தில் உள்ள ஆலைகளில் உற்பத்தியாகும் மொலாசஸ், எரி சாராயம் மற்றும் மின்சாரத்தை கொள்முதல் செய்த பிறகு, தேவை இருந்தால் வெளிமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யலாம்.

மேலும், ஆலைகளில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்த வகையில் ரூ.150 கோடியை அதிமுக ஆட்சியில் மின்சார வாரியம் நிலுவை வைத்துள்ளது. அந்த தொகையை விடுவித்தால், ஆலைகள் மீண்டும் இயங்கி, கரும்பு விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை முழுமை யாக ஆலை நிர்வாகம் வழங்க வழிவகை செய்ய வேண்டும். கரும்பு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தணிக்கை குழுவுக்கு தனித்தனியே கரும்பு விவசாய பிரதிநிதிகளை இடம்பெற செய்ய வேண்டும்.

ஏக்கருக்கு ரூ.1 லட்சம் கடனுதவி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in