

கமுதி அருகே குடிபோதையில் தம்பியை கொலை செய்த அண்ணனை போலீஸார் தேடி வருகின்றனர்.
கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன்கள் காந்தி(27), ராஜேஷ்(23). இவர்கள் சென் னையில் தங்களது குடும்பத்தி னருடன் தங்கி இருந்தனர்.
கரோனா ஊரடங்கால் சொந்த ஊரான பம்மனேந்தல் கிராமத்துக்கு திரும்பினார்.
இந்நிலையில் நேற்று பகலில் குடிபோதையில் இருவரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் காந்தி, தம்பி ராஜேஷை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினார். படுகாயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து, கோவிலாங் குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து காந்தியை தேடி வருகின்றனர்.