மூதாட்டியிடம் செயின் பறிப்பு :

மூதாட்டியிடம் செயின் பறிப்பு :
Updated on
1 min read

பெரம்பலூர் எளம்பலூர் சாலை குளோபல் நகரில் வசித்து வருபவர் ரங்கராஜ் மனைவி சகுந்தலா(65). இவர், நேற்று காலை 9 மணியளவில் அருகேயுள்ள கடைக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 2 நபர்கள், சகுந்தலா அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்துச் சென்றனர். இதுகுறித்து, பெரம்பலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in