பொம்மை தயாரிக்க இலவசப் பயிற்சி :

பொம்மை தயாரிக்க இலவசப் பயிற்சி :
Updated on
1 min read

தேனி தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பஞ்சு பொம்மை தயாரிப்பு குறித்த இலவசப் பயிற்சி வரும் 19-ம் தேதி முதல் தொடங்குகிறது.

காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை 13 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியுடன் உணவும் இலவசம். வங்கிக் கடன் ஆலோசனையும் வழங்கப்படும். ஆர்வம் உள்ளவர்கள் ஆதார் நகலுடன் நேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு 88703 76796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று இயக்குநர் தனசேகரபெருமாள் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in