திருப்பத்தூர் அருகே நகைக்கடை உரிமையாளரை கடத்த முயற்சி :

திருப்பத்தூர் அருகே நகைக்கடை உரிமையாளரை கடத்த முயற்சி :
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பையைச் சேர்ந்தவர் ஷாஜகான் (39). புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு கடையைப் பூட்டிவிட்டு நெற்குப்பையில் உள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். பரியாமருதுபட்டி அருகே வந்தபோது பின்னால் வந்த கார் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழந்த ஷாஜகான் காயமடைந்தார்.

அப்போது காரில் இருந்து இறங்கிய 4 பேர், கத்தியைக் காட்டி மிரட்டி ஷாஜகானை காருக்குள் ஏறுமாறு கூறினர். அதேநேரத்தில் அவ்வழியாக அடுத்தடுத்து வாகனங்கள் வந்தன.

இதனால், கடத்தல் கும்பல் காருக்கு அருகே சென்று அமைதியாக நின்றுகொண்டது. சுதாரித்த ஷாஜகான் அருகிலிருந்த காட்டுப் பகுதிக்குள் ஓடினார். பின்னர் குடியிருப்புப் பகுதிக்குச் சென்று அங்கிருந்த மக்களை அழைத்து வந்தார். அதற்குள் அக்கும்பல் தப்பியது. மேலும், ஷாஜகானின் பைக்கை எடுத்துச் சென்று நெற்குப்பையில் விட்டுச் சென்றனர்.

இது தொடர்பாக திருப்பத்தூர் டிஎஸ்பி பொன்ரகு, நெற்குப்பை இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in