நிர்வாக அனுமதி வழங்கியும் தொடங்கப்படாத பணிகள் ரத்து :

நிர்வாக அனுமதி வழங்கியும் தொடங்கப்படாத பணிகள் ரத்து :
Updated on
1 min read

கரூர் மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில் மாநில நிதிக்குழு மானியத் திட்டத்தின் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, இதுவரை பணிகள் தொடங்கப்படாத நிலையில் உள்ள ரூ.20.30 லட்சம் மதிப்பிலான பணிகளை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, 2018-19-ம் ஆண்டில் வாழ்வார் மங்கலத் தில் 30,000 லிட்டர், சேந்தமங்கலம் (கீழ்) ஊராட்சி ராமநாயக்கன் புதூர் காலனியில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் அமைத்தல், 2019-20-ம் ஆண்டில் க.பரமத்தி ஊராட்சி பெரியார்நகர் முதல் பவித்திரம் புதுக்கநல்லி பிரிவு வரையுள்ள பைப்லைன் விஸ்தரிப்பு செய்தல், 2020-21-ம் ஆண்டில் சித்தலவாய் ஊராட்சி கீரிக்கல்பட்டி மற்றும் மேலடையில் புதிய ஆழ்குழாய் அமைத்தல் ஆகிய பணிகளை ரத்துசெய்து, தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in