Regional01
நெல்லையப்பர் கோயிலில் திருமுறை விண்ணப்பம் :
திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆடிப்பூர திருவிழா நடைபெற வேண்டி, திருமுறை விண்ணப்பம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இத் திருக்கோயிலில் ஆடிப்பூர திருவிழாவை இவ்வாண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக விழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி ஆடிப்பூர விழா நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் அரசு விதிக்கும் சட்டவிதிமுறைகளின்படி நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா நடைபெற வேண்டி அம்மையப்ப விநாயகரிடம் பக்தர்கள் திருமுறை விண்ணப்பம் செய்து கூட்டு வழிபாடு நடத்தினர்.
