

கூடங்குளம் அணுமின் நிலைய சமூக வளர்ச்சி பணி திட்டத் தின் மூலம் பழவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.12 கோடியில் கலையரங்கத்துடன் இணைந்த இரண்டடுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டன. கூடங்குளம் அணுமின் திட்ட கூடுதல் தலைமை பொறியாளர் ஆபிரகாம் ஜேக்கப், தலைமை பொறியாளர் காந்த் ஆகியோர் இக்கட்டிடங்களை திறந்து வைத்தனர். தலைமையா சிரியை அமுதா பிரேம்காந்த், பள்ளி வளர்ச்சி குழுத் தலைவர் இசக்கியப்பன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் வேல் முருகன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆறுமுகம் பங்கேற்றனர்.