குறைந்த எண்ணிக்கை தடுப்பூசி ஒதுக்கீடு - சேலம் மையங்களில் காத்திருந்து ஏமாறும் மக்கள் :

குறைந்த எண்ணிக்கை தடுப்பூசி ஒதுக்கீடு -  சேலம் மையங்களில் காத்திருந்து ஏமாறும் மக்கள் :
Updated on
1 min read

சேலம் மாவட்டம் முழுவதும் இதுவரை முதல் மற்றும் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசியை 8.60 லட்சம் பேர் செலுத்திக் கொண்டனர். கடந்த சில நாட்களாக தடுப்பூசி இருப்பு இல்லாததால், தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த இரு நாட்களாக தடுப்பூசி சேலம் மாவட்டத்துக்கு ஒதுகீடு செய்ததை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 138 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. நேற்று முன் தினம் 20 ஆயிரம் பேருக்கும், நேற்று 15,500 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரோனா தொற்று மூன்றாம் அலை விரைவில் ஏற்பட கூடும் என்ற அச்சத்தால், பொதுமக்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், தடுப்பூசி மையங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் டோஸ்களின் எண்ணிக்கையை விட பல மடங்கு மக்கள் திரண்டு வருகின்றனர்.

மேலும், அதிகாலை 4 மணியில் இருந்தே பொதுமக்கள் மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட்டதும், மையங்களுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசி எண்ணிகைக்கு ஏற்ப தடுப்பூசி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். இதனால், பலர் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in