

தமிழகத்துக்கு தட்டுப்பாடின்றி தடுப்பூசி வழங்கவலியுறுத்தி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் நேற்று, தூத்துக்குடி போல்டன்புரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக மக்களுக்கு தேவையான 14 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு உடனடியாக வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் பி.சந்தனசேகர் தலைமை வகித்தார்.