

திருநெல்வேலி அருகே தாழையூத்தில் கொலை செய்யப்பட்ட கட்டிட ஒப்பந்ததாரர் நா. கண்ணன் (35) உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் 2-வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் வடக்கு தாழையூத்தை சேர்ந்த இவர், நேற்று முன்தினம் பண்டாரகுளம் அருகே மர்ம நபர்களால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்துக்கு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்ட போலீஸார் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கண்ணனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், வடக்கு தாழையூத்து பகுதி மக்களும் அப்பகுதியில் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.