நெல்லையில் சிஎஸ்ஐ திருமண்டல மாம்பழ சங்க பண்டிகை தொடக்கம் :

திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டலம் சார்பில் மாம்பழச் சங்கமும், 241-வது வருடாந்திர தோத்திர பண்டிகையும் பாளையங்கோட்டையில் நேற்று தொடங்கியது.   படம்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டலம் சார்பில் மாம்பழச் சங்கமும், 241-வது வருடாந்திர தோத்திர பண்டிகையும் பாளையங்கோட்டையில் நேற்று தொடங்கியது. படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டலம் சார்பில் மாம்பழ சங்கமும், 241-வது வருடாந்திர தோத்திர பண்டிகையும் பாளை யங்கோட்டையில் நேற்று தொடங்கியது.

மிலிட்டரிலைன் கிறிஸ்து ஆலய வளாகத்தில் அருட்தொண்டர்களின் தியாக நினைவு தோத்திர ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆலய வளாகத்திலிருந்து பவனி தொடங்கி, குளோரிந்தா ஆலயம், தெற்கு பஜார் வழியாக நூற்றாண்டு மண்டபத்தில் நிறைவடைந்தது. அங்கு திருமண்டல கொடியேற்றி, ஆயத்த ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு சபைகளின் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் 2-ம் நாளான இன்று பிரதான பண்டிகையும், திருவிருந்து ஆராதனையும், பள்ளிகளின் கலைநிகழ்ச்சிகளும், 3-ம் நாளான நாளை திருமண்டலத்தின் 241-வது வருடாந்திர ஸ்தோத்திர பண்டிகை பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயத்தில் நடைபெறுகிறது. இப்பண்டிகையில் பேராயர்கள் சந்திரசேகரன், ஓமன் ஜார்ஜ், லே செயலாளர் ஜெயசிங், உப தலைவர் சுவாமிதாஸ், குருத்துவ காரியதரிசி பாஸ்கர் கனகராஜ், பொருளாளர் மனோகர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in