

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்து 47 ரவுடிகளை கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்ட எஸ்பி சக்திகணேசன், மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை சீர் குலைக்கும் நோக்கில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்ய அந்தந்த உட்கோட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். அதன்படி சிதம்பரம் காவல்உட்கோட்டத்தில் 15 ரவுடிகள்,சேத்தியாத்தோப்பு காவல் உட்கோட்டத்தில் 9 ரவுடிகள், நெய்வேலி காவல் உட்கோட்டத்தில் 8 ரவுடிகள், திட்டக்குடி காவல்உட்கோட்டத்தில் 6 ரவுடிகள், விருத் தாசலம் காவல் உட்கோட்டத்தில் 5 ரவுடிகள், பண்ருட்டி காவல் உட்கோட்டத்தில் 3 ரவுடிகள், கடலூர் காவல் உட்கோட்டத்தில் 1 ரவுடி உள்ளிட்ட 47 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் - புதுச்சேரி எல்லைப் பகுதியில் ரவுடிகள் மோதல், கஞ்சா விற்பனை, ஆங்காங்கே ரவுடிகளுக்குள் மோதல் உள்ளிட்ட சம்பவஙகள் கடலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலையில், ஒரே வாரத்தில் 47 ரவுடிகளை கைது செய்து, அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரம் காட்டியிருக் கின்றனர்.