மூதாட்டிக்கு உதவிய காவல் ஆய்வாளருக்கு பாராட்டு குவிகிறது :

மூதாட்டிக்கு உதவிய காவல் ஆய்வாளருக்கு பாராட்டு குவிகிறது :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கல்லாவி பகுதியைச் சேர்ந்தவர் 88 வயது மூதாட்டி சரஸ்வதி. இவர் நேற்று மாதாந்திர ஓய்வூதியத் தொகை பெறுவதற்காக, ஊத்தங்கரையில் உள்ள வங்கிக்கு உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.

மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தபோது சாலை பழுதால் வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் சரஸ்வதி படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து நீண்ட நேரமாகியும் வரவில்லை.

இதனைக் கண்ட அவ்வழியேச் சென்ற ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் லட்சுமி, மூதாட்டியை மீட்டு தனது வாகனத்திலேயே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்குகாயம் அடைந்த மூதாட்டியை தூக்கிச் சென்று அனுமதித்தார். படுகாயம் அடைந்த சரஸ்வதிக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in