

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் மற்றும் திசையன்விளை வட்டங்களுக்கு உட்பட்ட மக்கள் புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை பெறுதல் மற்றும் ஸ்மார்ட் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம் வரும் 15-ம் தேதிராதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய குடும்பத் தலைவரின் புகைப்படம், குடும்பத்தலைவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள் (ஜந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் இல்லாதபட்சத்தில் பிறப்புச் சான்று போதுமானது), வங்கி கணக்கு புத்தகம், எரிவாயு இணைப்பு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை, மின்சார இணைப்பு அட்டை, வீட்டுவரி ரசீது,வீட்டு வாடகை ஒப்பந்தம் போன்றஇருப்பிட ஆதார ஆவணங்களில் ஏதாவது ஒன்று கொண்டுவர வேண்டும். புதிதாக திருமணமானவர்களுக்கு திருமண பத்திரிக்கை அல்லது திருமணச் சான்று தேவை.
பெயர் நீக்கம் செய்வதற்கான விண்ணப்பத்தை பதிவேற்ற பெயர் நீக்கம் செய்யப்பட வேண்டிய நபரின் ஆதார் அட்டை, புதிதாக திருமணமான நபர் எனில் திருமண பத்திரிகை அல்லது திருமணச் சான்று கொண்டுவர வேண்டும்.
முகவரி மாற்றம் செய்ய வீட்டு வரி ரசீது, வாடகை ஒப்பந்தம், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், எரிவாயு இணைப்பு புத்தகம் போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்று கொண்டுவர வேண்டும். நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க குடும்பத் தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர் என்பதற்கு ஆதாரமாக ஏதாவது ஒரு அடையாள அட்டை, ரூ.20 நகல் அட்டைக்கான கட்டணம் கொண்டுவர வேண்டும். ஸ்மார்ட் குடும்ப அட்டையில் செல்போன் எண் பதிவு செய்ய குடும்பத் தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர் என்பதற்கு ஆதாரமாக ஏதாவது ஒரு அடையாள அட்டைகொண்டுவர வேண்டும். இத்தகவல் திருநெல்வேலி மாவட்டஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.