தண்டனை நிறுத்தி வைப்பு சட்டத்தின்படி - கணவருடன் தன்னை விடுவிக்க நளினி கோரிக்கை :

தண்டனை நிறுத்தி வைப்பு சட்டத்தின்படி -  கணவருடன் தன்னை விடுவிக்க நளினி கோரிக்கை :
Updated on
1 min read

தண்டனை நிறுத்தி வைப்பு சட்டத்தின்படி தன்னையும் தனது கணவர் முருகனையும் நீண்ட விடுப்பில் விடுவிக்கக் கோரி தமிழக முதல்வருக்கு நளினி மனு அளித்துள்ளார் என வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக் கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள இவரது கணவர் கரன் என்ற முருகன் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள், இருவரையும் வழக்கறிஞர் புகழேந்தி நேற்று மாலை சந்தித்துப் பேசினார்.

பின்னர் வழக்கறிஞர் புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘நளினியும் அவரது கணவரும் ஒரு மாதம் பரோல் வழங்கக் கோரி ஏற்கெனவே முதல்வருக்கு கடந்த மாதம் 29-ம் தேதி மனு அளித்துள்ளார். அதை தொடர்ந்து உங்கள் தொகுதியில் முதல்வர் பிரிவுக்கு சிறைத்துறை மூலம் நளினி இன்று (நேற்று) மனு அளித்துள்ளார். அதில், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை கூடி முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இதில், முடிவு எடுக்கப் படாத நிலையில் தண்டனை நிறுத்தி வைப்பு சட்டத்தின் படி, தன்னையும் தனது கணவர் முருகனையும் நீண்ட நாள் விடுப்பில் விடுவிக்க வேண்டும் என கோரியுள்ளார். இந்த கோரிக்கை தொடர்பாக நளினியின் தாயார் பத்மா அவர்கள் இந்த வாரத்தில் முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளார்.

முருகனும்-நளினியும் இலங்கை யில் உள்ள உறவினர்களிடம் வீடியோ அழைப்பில் பேச உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இது தொடர்பான உத்தரவை சிறை துறை மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவை அனுப்பியுள்ளோம். வரும் 19-ம்தேதி இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் வர உள்ளது. அதற்குள் இவர்களை பேச அனுமதித்து விட்டு, பேசியது தொடர்பான அறிக்கையை சென்னை உயர் நீதிமன் றத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

இதனை நடைமுறை படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in