காங்கிரஸ் கட்சியினர் மிதிவண்டி பேரணி :

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, திருப்பத்தூரில் நேற்று மிதிவண்டி பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, திருப்பத்தூரில் நேற்று மிதிவண்டி பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.
Updated on
1 min read

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் மிதிவண்டி பேரணி நேற்று நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதைக் கண்டித்து. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மிதிவண்டி பேரணியை நேற்று நடத்தினர். மாவட்டத் தலைவர் பிரபு தலைமை வகித்தார். திருப்பத்தூர் சட்டப்பேரவை பொறுப்பாளர் பரத் முன்னிலை வகித்தார்.

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட முக்கிய வீதிகள் வழியாக மிதிவண்டி பேரணியாக சென்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பியவாறு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உடனடியாக குறைக்க வேண்டும். அதுவரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்த தயாராக உள்ளதாக அறிவித்தப்படி பேரணி யாக சென்றனர்.

இதில், காங்கிரஸ் கட்சியின் ஒன்றியத் தலைவர் ஜாவித், பொதுக்குழு உறுப்பினர் கணேஷ், கட்சி நிர்வாகிகள் ரவிச்சந்திரன், விஜயராகவன், சுரேஷ், பாஸ்கர், மணி, முன்னாள் கவுன்சிலர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம்

முக்கிய சாலை வழியாகச் சென்ற மிதிவண்டி பேரணியில் பங்கேற்றவர்கள் பாஜக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in