

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீர் ஈரோடு, கரூர் மாவட்டங்கள் வழியாக டெல்டா மாவட்டங்களைச் சென்ற டைகிறது. காவிரி ஆற்றின் பல்வேறு இடங்களில் சாயக்கழிவு, தோல்கழிவு நீர் மற்றும் சாக்கடை நீர் கலப்பதால், காவிரி ஆற்றின் பல பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் முளைத்துள்ளன.
தற்போது மேட்டூர் அணையில் இருந்துபாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆகாயத் தாமரைகளால் நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆறு மாசு படுவதோடு, மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கதவணைகளில் மின்சாரம் உற்பத்தி செய்வதிலும் அவ்வப் போது பாதிப்பு ஏற்பட்டு வரு கிறது. காவிரி ஆற்றில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளைஅகற்ற வலியுறுத்தி, சமூகஉரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில்,அதன் நிறுவனத் தலைவர் பி.வடிவேல் தலைமையில் நிர்வாகி கள் ஆற்றில் இறங்கி செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், ஆகாயத்தாமரைகளை அகற்ற வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.