அரசுப் பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் மரணம் : பேருந்தை நிறுத்தியதால் விபத்து தவிர்ப்பு

அரசுப் பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் மரணம்  :  பேருந்தை நிறுத்தியதால் விபத்து தவிர்ப்பு
Updated on
1 min read

ஈரோடு கவுந்தப் பாடியை அடுத்த மணியன் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (52). அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை கவுந்தப்பாடியில் இருந்து பெருந்துறை செல்லும் அரசுப் பேருந்தை செல்வராஜ் ஓட்டிச் சென்றார்.

வெள்ளாங்கோயில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டுள்ளார். மீண்டும் பேருந்தை எடுக்க முயற்சித்தபோது, அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நடத்துநர் கனகசபாபதியிடம் அவர் தெரிவித்துள்ளார். அங் கிருந்த பொதுமக்கள் உதவியுடன் ஓட்டுநர் மீட்கப்பட்டு சிறுவலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித் தனர். இந்த சம்பவம் குறித்து சிறுவலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதை உணர்ந்ததும், பேருந்தை தொடர்ந்து இயக்காமல், நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகளைக் காக்கும் வகையில் செயல்பட்ட ஓட்டுநரின் மரணம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது என்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in