கொத்தட்டை ஊராட்சியில் - குழந்தைகள் திருமண தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் :

சிதம்பரம் அருகே கொத்தட்டை ஊராட்சியில் குழந்தைகள் திருமண தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
சிதம்பரம் அருகே கொத்தட்டை ஊராட்சியில் குழந்தைகள் திருமண தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டை உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் திருமண தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நலத்துறை மகளிர் நல அலுவலர் சண்முகப்பிரியா கலந்துகொண்டு பேசுகையில் குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், அதை தடுக்கும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறினார். சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் ரங்கசாமி கலந்துகொண்டு சமூகத்தில் குழந்தை திருமணங்கள் ஏன் நடக்கின்றன என்பது பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் விளக்கிக் கூறினார். இதில் 12 வயது முதல் 19 வயது வரை உடைய 74 மாணவிகள் கலந்துகொண்டனர். பள்ளி தலைமையாரிசியர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்படுகளை பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர்கள் மீனா, சரஸ்வதி ஆகியோர் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in