ராமநதி- ஜம்புநதி கால்வாய் பணிக்கு - நிலம் கையகப்படுத்துவதற்கு ஆவணங்கள் சரிபார்க்கும் முகாம் :

ராமநதி- ஜம்புநதி கால்வாய் பணிக்கு -  நிலம் கையகப்படுத்துவதற்கு ஆவணங்கள் சரிபார்க்கும் முகாம் :
Updated on
1 min read

ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்துவதற்காக ஜூலை 14, 15, 16-ம் தேதிகளில் ஆவணங்கள் சரிபார்க்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் செயல்பாட்டுக் குழு தலைவர் ராம.உதயசூரியன் கூறியிருப்பதாவது:

ராமநதி- ஜம்புநதி இணைப்பு மேல்மட்ட கால்வாய் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்காக, நில உரிமையாளர்களை சந்தித்து, ஆவணங்களை சரிபார்க்க மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் வட்டாட்சியர், உதவி வட்டாட்சியர் ஆகியோர் அடங்கிய தனிநபர் பேச்சுவார்த்தை குழுவினர் சிறப்பு முகாம் நடத்த உள்ளனர். இம்முகாம் வரும் 14-ம் தேதி கடையம் பெரும்பத்து, 15-ம் தேதி ஆவுடையானூர், 16-ம் தேதி வெங்காடம்பட்டி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

எனவே, அந்தந்த பகுதி நில உரிமையாளர்கள் முகாம்களில் கலந்துகொண்டு தங்களது ஆவணங்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதைத்தொடர்ந்து விரைவில் இழப்பீடு வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in