

சாத்தான்குளம் தைக்கா தெருவைச் சேர்ந்தவர்கள் பாபுசுல்தான்(52), புகாரி (எ) புகாரி சதாம் ஹுசைன் (29), ரஸ்ரூதீன் (எ) முகம்மது வஜ்ரூதீன் (29), பாரீஸ் (எ) முகம்மது பாரீஸ் அலியப்பா (25), சிந்தா (எ) சிந்தா மர்சூக் (27) ஆகிய 5 பேரையும் கடந்த 10.06.2021 அன்று பைனான்சியர் மார்ட்டின் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூர்த்தி (20) ஒரு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் போலீஸாரால் கடந்த 15.06.2021 அன்று கைது செய்யப்பட்டார். பழையகாயல் பகுதியைச் சேர்ந்த சிவபெருமாள் (எ) சிவா (25) என்பவர் வழிப்பறி வழக்கில் கடந்த 07.06.2021 என்று ஏரல் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவர்கள் 7 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்பி பரிந்துரை செய்தார். அதனை ஏற்று 7 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டார். 7 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.