

பாளையங்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் மகாராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், சந்திப்பு பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையப் பணிகளை தாமதப் படுத்துவதாக மாநகராட்சிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பழுதடைந்த கோயில்களை கண்டறிந்து பராமரிப்பு செய்து, விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். நெல்லையப்பர் கோயிலில் கரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக ஆனித் தேரோட்டம் நடத்தப்படாததால் ஐப்பசி மாதத்தில் தேரோட்டம் நடத்த வேண்டும்.
பாளையங்கோட்டை ஜவகர் திடலில் தசரா திருவிழாவின்போது சப்பரங்களை நிறுத்தி வைக்கும் இடத்தை மாநகராட்சி அல்லது மாவட்ட நிர்வாகம் வேறு பயன்பாட்டுக்கு எடுக்கக் கூடாது. பொன்னாக்குடி நான்குவழிச் சாலை பாலத்தை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.