

திருத்துறைப்பூண்டி அருகே வளரும் தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் நேற்று முன்தினம் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டியை அடுத்துள்ள எடையூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி பாண்டியன்(46). வளரும் தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளரான இவர் நேற்று முன்தினம் இரவு வடசங்கேந்தி என்னுமிடத்தில் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
ரஜினி பாண்டியனுக்கும், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர் களுக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் ரஜினி பாண்டியனின் ஆதரவாளரான டிராக்டர் ஓட்டுநர் ஒருவருக்கும், எதிர்தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, எடையூர் காவல் நிலையத்தில் டிராக்டர் ஓட்டுநர் புகார் அளித்துள்ளார். இதற்கு ரஜினி பாண்டியன்தான் காரணம் என நினைத்து, எதிர்தரப்பினர் அவரை வெட்டிக் கொலை செய்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்தக் கொலையில் தொடர்புடையதாக எடையூர் சங்கேந்தியைச் சேர்ந்த மகாதேவன், ராஜேஷ் ஆகியோரை எடையூர் போலீஸார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இளைஞருக்கு கத்திக்குத்து
இதில் படுகாயமடைந்த வீரக்குமாருக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அங்கு பதற்றம் நிலவியதால் போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.