நெல்லை ரயில் நிலையத்தில் - பயணிகளுக்கு கரோனா பரிசோதனை :

கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்த பயணிகளுக்கு  திருநெல்வேலி ரயில் நிலையத்தில்  உடல் வெப்பநிலை பரிசோதனை  மற்றும்  கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்த பயணிகளுக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தில் உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
Updated on
1 min read

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்த பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது.

கரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து பயணிகள் திருநெல் வேலிக்கு வந்து செல்கிறார்கள்.

கேரளாவில் நாளொன்றுக்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரவுகிறது. இதனால் அம்மாநிலத்தில் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் கேரளா, கர்நாடகம், மகாராஷ்டிரா போன்ற பிறமாநிலங்களில் இருந்து திருநெல்வேலிக்கு வரும் பயணிகளுக்கு சந்திப்பு ரயில் நிலையத்தில் மாநகர நலஅலுவலர் டாக்டர் சரோஜா தலைமையிலான மருத்துவக் குழுவினர் கரோனா பரிசோதனை மேற் கொண்டனர்.

பரிசோதனை முடிவு வரும்வரையில் தங்களது இருப்பிடங்களில் அவர்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

புளியரையில் கண்காணிப்பு தீவிரம்

கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தையொட்டி உள்ள தென்காசி மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அருணா கூறும்போது, “ கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் புளியரை சோதனைச் சாவடியில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு சுகாதார ஆய்வாளர் மற்றும் பணியாளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். காய்ச்சல், உடல்வலி போன்ற ஜிகா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் இருந்தால் சிசுவுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in