கூலிபாளையம் பகுதியில் - தடுப்பூசி முகாம் நடத்த வலியுறுத்தல் :

கூலிபாளையம் பகுதியில்  -  தடுப்பூசி முகாம் நடத்த வலியுறுத்தல் :
Updated on
1 min read

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் கூலிபாளையத்தை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவில், "மாநகராட்சி 2-வது மண்டலம் 19-வது வார்டுக்கு உட்பட்டு கூலிபாளையம், நெட்டகட்டிபாளையம், கூலிபாளையம் ஆர்.எஸ்., நஞ்சராயன் குளம்ஆகிய பகுதிகள் உள்ளன. மேற்கண்ட பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

கரோனா 2-வது அலையில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே சுகாதாரத் துறை மூலம் வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடி மூலம் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

மேற்கண்ட பகுதிகளை உள்ளடக்கிய கூலிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 2 வாக்குச் சாவடிகள் உள்ளன. ஆனால், இதுவரை தடுப்பூசி முகாம் நடத்தப்படவில்லை. இதனால் அருகே உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தடுப்பூசி செலுத்த முடியவில்லை. எனவே, கூலிபாளையம் பகுதியில் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in