திருப்பூர் அருகே 24 மயில்கள் உயிரிழப்பு :

திருப்பூர் அருகே  24 மயில்கள் உயிரிழப்பு :
Updated on
1 min read

திருப்பூர் - தாராபுரம் சாலை புதுப்பாளையம் - பொல்லிக்காளி பாளையம் காட்டுப் பகுதியிலுள்ள ஏராளமான மயில்கள், இரை தேடிஅப்பகுதியில் உள்ள தோட்டங்கள்மற்றும் வயல்களுக்கு வருவது வழக்கம். இந்நிலையில், தனியாருக்குசொந்தமான காட்டுப் பகுதியில் மயில்கள் இறந்து கிடப்பதாக, அப்பகுதியை சேர்ந்த விவசாயி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்தார். வனத்துறை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்ததில், 24 மயில்கள் இறந்துகிடந்தது தெரியவந்தது.

இதில் 17 பெண் மயில்களும் அடங்கும் என்பது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இறந்த மயில்களின் உடற்கூறு ஆய்வுக்கு பின்னரே அதன் இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in