

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் குறைவான வாடகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது, என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வேளாண்மைப் பொறியியல் துறை பல்வேறு புதிய, நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகிறது. சேலம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயனைத் தரக்கூடிய வேளாண் இயந்திரங்களான டிராக்டர்கள், மண் அள்ளும் இயந்திரங்கள், நிலம் சமன் செய்தல், உரத்துடன் விதை விதைத்தல், களை எடுத்தல், அறுவடை, நீர் இறைத்தல் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளுக்கான இயந்திரங்கள் வேளாண் பொறியியல் துறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இயந்திரங்கள் குறைந்த வாடகை அடிப்படையில் விவசாயிகளுக்கு முன்னூரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது.
எனவே, குறிப்பிட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் குறைந்த வாடகைக்கு எடுத்திட வேளாண் துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். உதவி செயற்பொறியாளர், குமாரசாமிப்பட்டி சேலம் -7, 0427-2905277, 98947 82790 என்ற எண்களிலும், உதவி செயற்பொறியாளர், நங்கவள்ளி ரோடு, கோனூர், 0427-2905277, 98947 82790, ஆத்தூர் தென்னங்குடிபாளையம் உதவி செயற்பொறியாளர் 04282-290585, 89036 46543, சங்ககிரி உதவி செயற்பொறியாளர் 04283-290390, 94430 32718, குமாரசாமிப்பட்டி செயற்பொறியாளர் 0427-2906266, 96889 16434 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன் பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.