

பண்ருட்டியை அடுத்த அக்கட வல்லி ஊராட்சி செயலர் பதவிநியமனம் தொடர்பாக சட்டப்பேர வைத் தேர்தல் முன்பு அறிவிப்பு வெளியானது. அதே ஊரைச் சேர்ந்த 3 நபர்கள் ஊராட்சி செயலர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக பணி நியமனம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூலை 1-ம் தேதி அக்கடவல்லியைச் சேர்ந்த கெஜலட்சுமி என்பவரை ஊராட்சி செயலாளராக நியமனம் செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி, பணி நியமனம் அனுமதி கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
கெஜலட்சுமி கடலூர் ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் பணி நியமன அனுமதி கடிதத்தை வழங்குவதற்காக சென்றார். அப்போது, அதே பணிக்கு மற்றொ ருவரை ஊராட்சி செயலராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றி அனுமதி கடிதம் அளிக்கப்பட்டதும், அவர் பணியில் சேர்ந்துள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையறிந்த கெஜலட்சுமி தனக்கு முதலில் பணி நியமன ஆணை வழங்கி விட்டு வேறு நபருக்கு மற்றொரு பணி நியமன ஆணை எவ்வாறு வழங்கலாம். தன்னிடம் பணிக்காக பணம் பெற்று ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டினார்.
தனக்கு வேலை வழங்க தவறும்பட்சத்தில் தற்கொலை செய்து கொள்வேன் என்ற கோரிக்கையை முன்வைத்து தனது கணவருடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்து புதுப்பேட்டை காவல்துறையினர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதால் அவர் அங்கிருந்து சென்றார்.