

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே பார்வை குறைபாடுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 40 சதவீதத்துக்கும் மேல் பார்வைக்குறைபாடுடைய மாணவர்களை சேர்க்க விருப்பம் உள்ளோர் பள்ளித் தலைமை ஆசிரியரை நேரிலோ, 04322 226452 எண்ணிலோ தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.