

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பலியிடப்படும் ஆடு, மாடுகளின் கழிவுகளை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மேலப்பாளையத்தில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பா. விஷ்ணுசந்திரன் உத்தரவின் பேரில், மேலப்பாளை யம் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாநகர நல அலுவலர் மா. சரோஜா தலைமை வகித்தார். சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது, நிர்வாக அலுவலர் மாரியப்பன், கண்காணிப்பாளர் காசி, சுகாதார ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், நடராஜன் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் பங்கேற்றனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடு, மாடுகளை பலியிட்ட பின்னர் கழிவுகளை சுகாதாரமான முறையில் உடனுக்குடன் அப்புறப்படுத்த மாந கராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்து ஜமாத்துகளை சேர்ந்தவர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.