

திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பொதிகை திருச்சபை சார்பில் ரூ.1.25 லட்சம் மதிப்பில்மயில் வாகனம் உருவாக்கப்பட்டு கோயிலில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து புண்ணிய வாஜனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ரதவீதிகளில் மயில் வாகனம் வெள்ளோட்டம் விடப்பட்டது. சீர்பாதம் தாங்கிகள் மயில் வாகனத்தை ரதவீதிகள் வழியாக எடுத்து வந்தனர். இதில் பக்தர்கள் பங்கேற்றனர்.