

திருவண்ணாமலை அருகே மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை அடுத்த நாடழகானந்தல் கிராமத்தில் வசிப்பவர் ரங்கநாதன் மனைவி பவுனம்மாள்(80). இவர், தனது வீட்டின் முன்பு நேற்று முன்தினம் இரவு உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், மூதாட்டியின் வாயை பொத்தி கத்தியை காட்டி மிரட்டி நகையை கேட்டதாகவும், உயிருக்கு பயந்து பாத்திரத்தில் மறைத்து வைத்திருந்த 5 பவுன் நகையை எடுத்து கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த மர்ம நபர் தப்பித்து சென்றுள்ளார்.
இது குறித்து வேட்டவலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தங்க நகையை பறித்து சென்றவரை தேடி வருகின்றனர்.