ஸ்டான்சாமி மறைவுக்கு அஞ்சலி, ஆர்ப்பாட்டம் :

ஸ்டான்சாமி மறைவுக்கு அஞ்சலி, ஆர்ப்பாட்டம்  :
Updated on
1 min read

அருட்தந்தை ஸ்டான்சாமி மறைவுக்கு திண்டுக்கல்லில் பெரியாரிய உணர்வாளர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் இரவணா தலைமை வகித்தார். மாநிலப் பிரச்சார அணிச் செயலாளர் துரை.சம்பத், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் வீரபாண்டி, தமிழர் சமூக நீதிக்கழக மாநில நிறுவனர் தங்கப்பாண்டி, ஆதித்தமிழர் பேரவை கிழக்கு மாவட்டச் செயலாளர் காளிராஜ், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாநில அமைப்பாளர் புலேந்திரன், மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ்ப்புலிகள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்துக்கு முன்னதாக ஸ்டான்சாமி படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

பழங்குடியின மக்களின் போராளி ஸ்டேன் சுவாமியின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனை முன் தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாலுகா குழு உறுப்பினர் பூமிநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம். ராஜ்குமார் கோரிக்கையை விளக்கிப் பேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.குருவேல், என்.கலையரசன், இ.கண்ணகி, தாலுகா செயலாளர் பி.செல்வராஜ் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in