

மேலப்பாளையம் ஜின்னா திடலில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருநெல் வேலி மாநகர நல அலுவலர் சரோஜா மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்.
பசுமை மேலப்பாளையம் அமைப்பின் செயலாளர் பக்கீர் முகமது, சுகாதார அலுவலர் ஷாகுல் ஹமீது, சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், பாலசுப்பிரமணியன் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். பசுமை மேலப்பாளையம் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 3,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.