இளைஞர் மர்ம மரணம் - 3 பேரை பிடித்து விசாரணை :

இளைஞர் மர்ம மரணம்  -  3 பேரை பிடித்து விசாரணை :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் பனவடலி சத்திரத்தை அடுத்துள்ள கிணற்றின் அருகே மா. திருமலைக்குமார் (28) என்பவர் மர்மமாக இறந்து கிடந்தது தொடர்பாக போலீஸார் 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பனவடலிசத்திரம் அருகே ஜமீன்இலந்தைக்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் திருமலைக்குமார்(28). ஜேசிபி ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்குமுன் வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் இரவு வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. அவரது உறவினர்கள் தேடிப்பார்த்த போது ஊரையொட்டியுள்ள சந்திரன் என்பவரது கிணற்றின் அருகே திருமலைக்குமார் சடலம் கிடந்தது தெரியவந்தது.

தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக திரு மலைக்குமாரின் தாயார் வேலு த்தாய் அளித்த புகாரின் பேரில், பனவடலிசத்திரம் போலீஸார் அப்பகுதியைச் சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in