

சேலம் மாவட்டத்தில் இன்று (8-ம் தேதி) 240 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடக்கவுள்ளன.
இதுதொடர்பாக சேலம் சுகாதார மாவட்டம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுப்ரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்ட ஊரக பகுதிகளில் இன்று 49 மண்டலங்களில் 179 காய்ச்சல் பரிசோதனை முகாம்களும், நகரப் பகுதிகளில் 4 மண்டலங்களில் 13 முகாம்களும், சேலம் மாநகராட்சி பகுதியில் 16 மண்டலங்களில் 48 முகாம்கள் என மொத்தம் 69 மண்டலங்களில் 240 இடங்களில் முகாம்கள் நடக்கவுள்ளன என்று தெரிவித்துள்ளார்.