

ஈரோடு மாவட்டத்தில் 213 டாஸ்மாக் கடைகளும், 128 பார்களும் செயல்பட்டு வந்தன. சாதாரண நாட்களில் ரூ.3 கோடி முதல் ரூ.4வரை இக்கடைகளில் மது விற்பனை நடக்கும். பண்டிகைக் காலங்களில் அதிகபட்சமாக ரூ.10 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் இயங்கவில்லை.
இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நேற்று முன்தினம் (5-ம் தேதி) டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.7 கோடியே 1 லட்சத்து 77 ஆயிரத்து 510-க்கு மதுபானங்கள் விற்பனையானது. பீர் வகைகள் அதிக அளவில் விற்பனையானதாக தெரிவித்த அதிகாரிகள், கூட்டம் அதிகம் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினர். டாஸ்மாக் கடைகள் முன்பாக தடுப்புகள் அமைக்கப்பட்டு, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் போடப்பட்டு இருந்தன.