போச்சம்பள்ளியில் கனமழையால்  -  17 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய வலசகவுண்டனூர் தடுப்பணை :

போச்சம்பள்ளியில் கனமழையால் - 17 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய வலசகவுண்டனூர் தடுப்பணை :

Published on

போச்சம்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால், அப்பகுதியில் உள்ள வலசக வுண்டனூர் தடுப்பணை 17 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, மத்தூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. குறிப்பாக போச்சம்பள்ளியில் பெய்த கனமழையால், 17 ஆண்டுகளுக்கு பிறகு வலசகவுண்டனூரில் கட்டப் பட்டுள்ள தடுப்பணை நிரம்பியது. இதில் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் ஊராட்சி தலைவர் ஜெயவேல் தலைமையில் பூஜை செய்து, மலர் தூவினர்.

நேற்று காலை 7 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) போச்சம்பள்ளி - 95.2, பாரூர் - 26.4, கிருஷ்ணகிரி - 9.2, பெனுகொண்டாபுரம் - 12, நெடுங்கல் - 27, தளி - 10, ராயக்கோட்டை - 31 மிமீ மழை பதிவானது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in