

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள சங்குபுரம் கிராம த்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மகன் சிங்கதுரை (25). ஆட்டோ ஓட்டுநரான இவர், கரும்பு தோட்டத்துக்கு ஆட்களை அழைத்துச் செல்வதற்காக தனது ஆட்டோவில் பனையூர் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது, பனையூர் கிராமத்தைச் சேர்ந்த பிரமோத் (26). மதன் (26), மகேந்திரன் (26), ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (26) ஆகியோர் ஆட்டோவை வழி மறித்து தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
வாக்குவாதம் அதிகரித்ததால் அரிவாளால் வெட்டப் பட்டதில் பலத்த காயம் அடைந்த சிங்கதுரை தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கரிவலம் வந்த நல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி பிரமோத், இசக்கிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய மகேந்திரன், மதனை தேடி வருகின்றனர்.